News In Live

இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
டோக்கியோ : நேற்று இந்தியா - ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 3 நாள் பயணமாக நமது பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் தனது மனைவி குர்சரண் கவுருடன் ஜப்பான் சென்றார். அவர் நேற்று ஜப்பான் பிரதமர் தரோ அசோவைச் சந்தித்தார். இருவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, ராணுவம், தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து மன்மோகன் சிங், கூட்டறிக்கையில் கூறி இருப்பதாவது : பாதுகாப்பு, ராணுவம், வெறியுறவு தவிர ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரண்டு நாடுகளும் ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கடலோரக் காவல்படை, போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி, பேரிடர், சுனாமி, தீவிரவாதம், சர்வதேச குற்றங்கள், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுத பரவல் தடை போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும். சந்தேகத்துக்குரிய பண பரிமாற்ற தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வது கண்காணிக்கப்பட்டு தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். நேற்று பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் மன்னர் அதிகிடோவைச் சந்தித்துப் பேசினார். ஜப்பான் தொழில் அதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

அடுத்து பிரதமர் சீனா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் சீன அதிபர் ஹீ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜியாபேசி ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளார். அங்கு நடைபெற உள்ள ஆசிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். பிரதமர் 25-ம் தேதி டெல்லி திரும்ப உள்ளார்.

சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
“மழை பெய்தாலும் ராக்கெட் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்திருந்தபடியே இன்று காலை சரியாக 6.20 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது, சந்திராயன்-1 விண்கலம்.

இதன் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நிலவிற்கு ஆளில்லா செயற்கைக் கோள் அனுப்பும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. “100% துல்லியமாக ஏவப்பட்டுள்ள விண்கலம் சரியான பாதையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 2 வாரங்களில் நிலவை அடைந்து விடும்” என்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

நூறு கி.மீ தூரத்திலிருந்து சந்திரனை சுற்றி வந்து தகவல்களை சேகரிக்கும் முப்பரிமான, உயர்தர வரைப்படங்களை அங்கிருந்தே இங்குள்ள தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். இது அறிவியல் ஆய்வுக்கு பயன்படும். சந்திரயான் தரையில் இறங்காமல் ‘மூன் இம்பாக்ட் பிராப்’ எனும் சிறு கருவியை நிலவின் தரைப் பகுதிக்கு அனுப்பி அங்கு நமது இந்திய கொடி வைக்கப்படும். அங்கு நமது தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும்.

சந்திரன் நிலப்பரப்பிலுள்ள தாதுக்கள், வேதிப்பொருட்கள், கதிரியக்கப் பொருட்கள் ஆகியவற்றையும் சந்திரயான் ஆராயும். சந்திரயான் திட்டத்தின் இயக்குனராக இருந்து திட்டத்தின் முழுப் பொறுப்பை ஏற்று இரவு பகலாக விஞ்ஞானிகளுடன் உழைத்திருப்பவர் நம் தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். இந்த தமிழனுக்கு தமிழகமே தலை வணங்குகிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் நடந்தது. இதில் 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது, இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தது இதுவே முதல்முறை.

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 469 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 268 ரன்களே எடுத்தன. இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 516 ரன்களுக்கு சவால் விட்டது, இந்திய அணி. ஆனால் 141 ரன்களுக்கு   மேல் தொடர முடியாமல் திணறியது, ஆஸி அணி. முடிவில் 195 ரன்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது, ஆஸி.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. வெற்றிக்கு சிறப்பான வியூகம் அமைத்த தோனி, இப் போட்டியின் மூலம் தன்னை சிறந்த டெஸ்ட் கேப்டனாக வெளிப்படுத்தியுள்ளார். அதோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றிருக்கிறார். தோனியின் இந்த தீபாவளி பரிசு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
தீபாவளியை முன்னிட்டு கடன்வட்டி குறைப்பு சலுகையை வங்கிகள் அறிவித்து வருகின்றன. வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “பண்டிகை காலத்தில் கடன் பெற விரும்புபவர்களை ஊக்கமளிக்கும் வகையில் வட்டி குறைப்பு அறிவிக்கப்படும். இது போன்ற சலுகைகளுக்காக பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். சென்ற ஆண்டு இதுபோன்ற திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று இந்த வருடமும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியும் புளோட்டிங் முறையிலான வீட்டு கடன் வட்டியை 0.5 சதவீதம் குறைத்துள்ளது. கல்வி கடனுக்கு அரை சதவீத வட்டி குறைத்துள்ளனர். பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோருக்கு அரை சதவீத வட்டி குறைக்க பஞ்சாப் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து தனியார் வங்கிகளும், சில அரசு வங்கிகளும் வர்த்தக போட்டியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடன் வட்டியை குறைத்துள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

தான்சேனாக அபிஷேக் பச்சன்!
இந்தியில் பெரிய அளவில் சரித்திரப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அபிஷேக் பச்சன் பிரபல இசைமேதை தான்சேனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சதீஷ் கௌஷிக் இயக்குவதாக உள்ளார்.

“கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் இந்தப் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் யார் இந்தப் படத்தின் கதாநாயகன் என்பது எனக்கு சரிவரத் தெரியவில்லை. ‘கர்ஜ்’ படத்தின் வெளியீட்டு பணியில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் இந்த விவரம் எனக்கு தெரியவில்லை. தயாரிப்பாளருக்கு அபிஷேக்கை போடலாம் என்ற எண்ணம் இருத்திருக்கலாம்” என்றார் இயக்குனர் கௌஷிக்

இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் ஜேசுதாஸ் பாடும் 4 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம். “மற்ற பாடல்கள் கதாநாயகி முடிவான பிறகு போட்டு முடிப்பேன்” என்கிறார். கதாநாயகியாக்கு தீபிகா படுகோனின் பெயரை முன்மொழிந்துள்ளார்களாம்.

புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
உலகிலேயே சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, தாய்லாந்திலுள்ள புக்கட் தீவுகள். ஹரித்திக் ரோஷனும் அமீஷா பட்டேல் நடித்த ‘கஹோனா ப்யார் ஹை’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான டைட்டில் பாடல் இங்கு படமாக்கப்பட்டதிலிருந்தே அந்த இடத்திற்கு ஏகமவுசு. சென்ற ஒரு ஆண்டிலேயே ஒரு டஜனுக்கு மேலான தமிழ் படப் பாடல்கள் இந்த கடற்கரையோர தீவில் இடம் பெற்றுவிட்டது.

ஏகனுக்காக ஸ்விட்சர்லாந்தில் ஆடி பாடிவிட்டு ‘வில்லு’ படத்துக்காக ‘புக்கட்’டுக்கு விஜய்யுடன் ஆடி பாட வந்திருந்தார் நயன்தாரா. அப்போதுதான் ‘ஐந்தாம் படை’க்காக சுந்தர். சியுடன் படப்பிடிப்பை முடித்து விட்டு போயிருந்தார், குஷ்பு.

ஊட்டியை விட புக்கட் மலிவாக இருப்பதும் இந்த இடத்தை நாடி வருவதற்கான காரணமாக இருக்கலாம்.

வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
வங்கிகள் அரசு கடன் பத்திரங்களை சமர்ப்பித்து, பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் ‘ரெப்போ ரேட்’ எனப்படுகிறது.

இந்த ரெப்போ சேட் குறைக்கப்பட்டதையடுத்து ஏராளமான வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டு வசதிக் கடன், தனி நபர்கடன் மற்றும் நிறுவனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளிலிருந்து கடன் பெறுபவர்கள் பயனடைவார்கள். கச்சா எண்ணெயின் விலையும் தற்போது 50% குறைந்துள்ளது. இதனால் நாட்டின் பணவீக்க விகிதமும் குறைந்து வருகிறது. இதனால்தான் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போரேட்டை 9 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்துள்ளது” என்றார், ப.சிதம்பரம்.

தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக அரசு, அனைத்து சினிமா தியேட்டர்களிலும் ஐந்து காட்சிகள் ஓட்டிக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொது செயலாளர் அ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், “தமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தியேட்டர்களுக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 28,29,30,31 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சியும் விடுமுறை நாட்களான அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 1,2 ஆகிய தேதிகளிலும் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்தி கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று நடமாடும் திரையரங்குகளுக்கும் அதே தேதிகளில் பகல்காட்சியும் அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் காலை காட்சியும் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் கோரிக்கை வரி அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு கூடுதல் காட்சிகளை ஓட்டிக் கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

மழை பாதிப்பு, சமாளிக்க தமிழக அரசு தயராகி விட்டது
தொடர்ந்து பெய்து வரும பருவ மழையின் பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு தயாராகி உள்ளது. இது சம்பந்தமாக தலைமை செயலாளர், துறை அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும், மாநில நிவாரண ஆணையர் அலுவலகத்திலும் போதுமான பணியாளர்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கிவருகிறது. பருவ மழை தொடர்பான எதிர்பாரா நிகழ்வுகளை சமாளிக்க மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் பாதிப்படைந்துள்ள நதிக்கரைகள், பாலங்கள் சிறு பாலங்கள் இவற்றின் மீது தனி கவனம் செலுத்துமாறும் உத்திரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சாலைகளில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மழைநீர் வடிக்கால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய மாநகராட்சி பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். கால்வாய்களின் கரைகளை சரிசெய்யவும், மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க தகுந்த இடங்களை தேர்வு செய்யவும், தொற்று நோய்கள் ஏற்பபடாமலிருக்க போதுமான நடவடிக்கை எடுக்கவும். சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார். மழைகாலங்களில் குடிநீரின் தரங்களை பாதுகாக்கவும், கழிவுநீர் குடிநீரில் கலக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தப்பட்டார். இதனையடுத்து மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ளுமாறு சுகாதார துறை ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டனர். பாதிக்கப்படும் மக்களை மீட்ககும்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தப்பட்டனர். பொதுமக்களுக்கு உதவ அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது’ இவ்வாறு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வன்முறையில்லாத காதல் படம் ‘அவள் பெயர் தமிழரசி’!
ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார், மீரா கதிரவன். விஜய் ஆண்டனி இசையில் கலக்குகிறார் கிராமத்தின் அடையாளங்கள் விடுபடாமல் அதன் அழகு அனைத்தையும் அப்படியே ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையா. மோசர் பேயர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு கட்ட படப் பிடிப்பு முடிந்து விட்டாலும் கதாநாயகி யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்கள். படம் ரிலீசாகும் போதுதான் தெரிவிப்பார்களாம். “தமிழ் அடையாளங்களை மையப்படுத்தும் தனித்துவமான கதையம்சத்துடன் வெளிவரப்போகும் படம் இது” என்கிறார் மீரா.

சினிமா மற்றும் பறவைகள் பற்றிய ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் இப்படத்தில் நடிப்பது கூடுதல் தகவல்.