முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு

பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு

தீபாவளியை முன்னிட்டு கடன்வட்டி குறைப்பு சலுகையை வங்கிகள் அறிவித்து வருகின்றன. வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “பண்டிகை காலத்தில் கடன் பெற விரும்புபவர்களை ஊக்கமளிக்கும் வகையில் வட்டி குறைப்பு அறிவிக்கப்படும். இது போன்ற சலுகைகளுக்காக பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். சென்ற ஆண்டு இதுபோன்ற திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று இந்த வருடமும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியும் புளோட்டிங் முறையிலான வீட்டு கடன் வட்டியை 0.5 சதவீதம் குறைத்துள்ளது. கல்வி கடனுக்கு அரை சதவீத வட்டி குறைத்துள்ளனர். பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோருக்கு அரை சதவீத வட்டி குறைக்க பஞ்சாப் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து தனியார் வங்கிகளும், சில அரசு வங்கிகளும் வர்த்தக போட்டியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடன் வட்டியை குறைத்துள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.