பெட்ரோலிய பொருட்களுக்குள்ள தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், பயோடீசலை பயன்படுத்தி ரெயில்வண்டிகளை இயக்க முடிவெடுத்துள்ளது, ரெயில்வே துறை. கடந்த 5 ஆண்டுகளாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. காட்டு ஆமணக்கு கொண்டு தயாரிக்கப்பட்ட பயோடீசல் தொழிற்சாலை இந்தியாவில் நான்கு இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஈரோட்டில் இதற்கான தொழிற்சாலை அமைக்க ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும். இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த பயோடீசல் ஆலைகள் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் லிட்டர் பயோடீசல் திறன் கொண்டதாக இருக்கும் ஆக நான்கு ஆலைகளில் இருந்து 2 லட்சம் லிட்டர் பயோடீசல் ஒரு நாளைக்கு தயாராகும். இந்த பயோடீசலை டீசலுடன் கலந்து ரெயில் வண்டிகள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply