“மின் உற்பத்திக்காக வாங்கப்படும் டீசலின் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி எனப்படும் ‘வாட்’டுக்கு ஆகும் செலவை அரசு தரும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார், முதல்வர்.
பெரிய தொழிற்சாலைகள், தங்களிடம் உள்ள ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அதிகளவில் டீசல் தேவைப்படும்.
சந்தையில் ஒரு லிட்டர் டீசல் 37 ரூபாய்க்கு கிடைக்கும் போது தொழிற்சாலைக்கு மட்டும் 50 ரூபாய்க்கு என்று விற்பதால் அதிருப்தியில் இருக்கும் தொழில் அதிபர்களின் நிலையைக் கருத்தில் கொண்ட முதல்வர், “தொழிற்சாலை மின் உற்பத்திக்கென பயன்படுத்தப்படும் டீசலின் மீது விதிக்கப்படும் வாட் வரியை தமிழக மின் வாரியம் திருப்பிக் கொடுக்கும்” என்று அறிவித்திருக்கிறார்.
இது சாத்தியமாகுமா என்று யோசிக்கிறார்கள், மின்சார வாரிய ஆட்கள். “டீசலே வாங்காமல், வாங்கியதாக பில்லைக் காட்டி ‘வாட்’ தொகையைப் பெறலாம் அல்லவா” என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள், அவர்கள்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply