முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும்

“தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

தேசிய விவசாயக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை பெறுவதற்கு தாமதமாவதாக மத்திய மந்திரி ப.சிதம்பரத்திடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நிதியமைச்சரகம் இதுகுறித்த விவரங்களைச் சேகரித்தது.

அதன்படி விவசாயக் காப்பீட்டுக் கழகம் ரூ.181 கோடியும், மத்திய மற்றும் மாநில அரசு ரூ.373 கோடியும் வழங்க வேண்டும் மத்திய அரசு மற்றும் காப்பீட்டுக் கழகம் இந்த தொகை தருவதற்கு தயாராக உள்ளது. சில மாநில அரசுகளின் பங்குகள் இதுவரை பெறப்படவில்லை. இதுகுறித்து ப.சிதம்பரம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத இருக்கிறார். மாநில அரசு தனது பங்கை செலுத்திவிடும் என்று எண்ணுகிறது, நிதியமைச்சரகம். ஆனால் தமிழக அரசு தனது பங்கை செலுத்திவிட்டதால் தமிழகத்தில் பயிர் காப்பீடு பெற்றுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார், ப.சிதம்பரத்தின் கூடுதல் தனி செயலாளர்.







புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.