பெங்களுரு : ஆசியாவிலேயே தேவையற்ற இமெயில் (ஸ்பாம்) அனுப்புவதில் இந்தியாதான் முதலிடம் வகிப்பதாக டிரென்ட் மைக்ரோ நிறுவனம் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. டிரென்ட் மைக்ரோ நிறுவனம் நடத்திய ஆய்விலிருந்து கிடைத்த தகவல்கள் பின்வருமாறு : அதிக தேவையற்ற இமெயில் அனுப்புவதில் முதலாவதாக உள்ளது, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள். உலகின் ஸ்பாம் மெயிலில் ரஷ்யாவின் பங்கு 11% அடுத்து அமெரிக்காவில் 9.36% இந்தியாவில் 4.26% தேவையற்ற இமெயில்கள் அனுப்பப்படுகின்றன.
உலகின் வளர்ச்சி அடைந்த 10 நாடுகளில் மட்டும் 57.4% தேவையற்ற மெயில் உருவாக்கப்படுகின்றன. 6.65 கோடி ஸ்பாம் மெயில்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகின்றன.
பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் 20% ஸ்பாம் மெயில் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் ஆசிய கண்டத்தில் மட்டும் 16.57% இத்தகைய தேவையற்ற இமெயில் அனுப்புவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்து.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply