முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
எம்.பி.ஏ படித்தாலும் அதிக சம்பளம் கிடைக்காது!

எம்.பி.ஏ படித்தாலும் அதிக சம்பளம் கிடைக்காது!

புதுடெல்லி : தற்போது எம்.பி.ஏ படித்து முடித்த கையோடு பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்தால் அதிக சம்பளம் வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியுள்ளது.

பி.இ படித்தால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று பலர் நினைத்தனர். ஆனால் ஆங்கிலப் புலமை அதிகம் உள்ளவர்களுக்கே நிறைய வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

முதல் நிலையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கே அதிக முன்னூரிமை தரப்படுகிறது. இப்போது எம்.பி.ஏ படித்த மாணவர்களுக்கும் அபாயம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மேலாண்மை கல்வியில் சிறந்த ஐ.ஐ.எம், கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ படித்த மாணவர்களுக்கு பல லட்சம் ஆண்டு சம்பளம் அளித்து பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் போக்கு சில ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் சர்வதேச நீதி நெருக்கடியால் பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதல் டில்லி நிறுவனங்களான ஐ.ஐ.எம்.களில் மட்டும் எம்.பி.ஏ மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளன. சம்பளமும் இருமடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம் எம்.பி.ஏ படித்தும் மாணவர்களுக்கு லாபமில்லை என்பதே மேலாண்மை கல்வி பேராசியர்களின் கருத்து.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.