முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு பல கோடி இழப்பு!

அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு பல கோடி இழப்பு!

நியூயார்க் : கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் பயங்கரச் சரிவு காணப்பட்டது. இதன் காரணமாக, நாஸ்டாக் மற்றும் நியூயார்க் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 16 இந்திய நிறுவனம் பங்குகளின் விலையும் மிகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இது வரை ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் கோடியாக இருந்த இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகச் சரிந்தது. இதில் குறிப்பாக சாப்ட்வேர் நிறுவனப் பங்குகள் அதிக அளவிலான சரிவைச் சந்தித்தன. இவற்றின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.18,800 கோடி. இதில் முதன்மையாக இன்போசிஸ் ரூ.9,900 கோடி இழப்பைச் சந்தித்தது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ரூ.4,408 கோடி, விப்ரோ ரூ.7,993 கோடி பட்னி கம்ப்யூட்டஸ் ரூ.338.4 கோடி இழப்பைச் சந்தித்தன. அதே சமயம் இணையதள சேவை வழங்கும் சிபி நிறுவனப் பங்குகள் மதிப்பு மட்டும் ரூ.14 கோடி உயர்ந்தது.

இதே போல் எச்.டி.எப்.சிக்கு ரூ380 கோடி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் விலை 8.6 சதவீதம் குறைந்ததால், ரூ.5,593 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.2,298 கோடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பாகும். இனி பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன் சற்றே கவனம் தேவை.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.