முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பெட்ரோல் - டீசல் விலை குறையாது அமைச்சர் பேச்சு!

பெட்ரோல் - டீசல் விலை குறையாது அமைச்சர் பேச்சு!

ஜெய்ப்பூர் :  “சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், “இந்துஸ்தான் பெட்ரோலியன் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உள்ளிட்ட கம்பெனிகள் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இந்நிலையே உள்ளது.

இப்போது பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய் ஆகியவை முறையே லிட்டருக்கு 10 ரூபாய், 12 ரூபாய், 30 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாயும் அரசு மானியம் அளித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையைக் குறைத்தால் பாதிக்கப்படுவது எண்ணெய் நிறுவனங்கள்தான்.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவில்லை. வெளிநாட்டிலிருந்து ஆண்டுக்கு 74 முதல் 75% கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இனி வரும் காலத்தில் எல்லோரும் மாட்டு வண்டியில் பயன்படுத்தினாலும சொலவதற்கு இல்லை.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.