நடப்பு ஆண்டில் 4,25,000 டன் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி இலக்காக
நிர்ணயித்திருந்தது. ஆனால் முதல் ஐந்து மாதங்களிலேயே இந்த இலக்கை எட்டிப்
பிடித்திருக்கிறது. இதனால் ஆண்டு முடிவடைவதள்குள் அதிகளவில் ஏற்றுமதி
செய்ய முடியும். அதிகளவில் கிடைக்கும் லாபத்தில், பற்றாக்குறையாக
இருக்கும் இதர அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
நறுமணப் பொருட்களில் மிளகு மட்டும் அதன் இலக்கிலிருந்து சரிந்தாலும்
பாதிப்பு பெரிய அளவிலில்லை.
ஏற்றுமதியில் மிளகாயின் பங்களிப்பு மடடும் 22 சதவீதம் உள்ளது. அண்டை
நாடுகளில் இதன் உற்பத்தி குறைந்துள்ளதோடு நம் நாட்டு மிளகாயின் தரம்
உயர்வாக இருப்பதால் இலங்கை இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில்
அதிகளவில் இறக்குமதி செய்கின்றன.
சிரியா, துருக்கியில் சீரகத்தட்டுப்பாடு இருப்பதால் இந்தியாவிடமிருந்து
சீரக ஏற்றுமதியின் அளவும் அதிகரித்துள்ளது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply