சென்னை : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி திருநாளுக்குப் பட்டாசு மற்றும் மத்தாப்பு விலைகள் 40% உயரும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி பேசுகையில், “பட்டாசு உருவாவதற்கு முக்கியப் பொருள், கந்தகம். இதன் விலை கடந்த ஏப்ரல் மாதம் டன்னுக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போதோ ஒரு டன் 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
இது அல்லாது பொட்டாசியம், நைட்ரேட், அலுமினியத்தூள், பாஸ்பரஸ், வெடிகளை ஒட்டப் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், பெயர்க்குறிப்புகள் (லேபிள்கள்) போன்றவற்றின் விலைகளும் பெருமளவில் உயர்ந்துள்ளன.
இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு மற்றும் மத்தாப்பு விலை 40% வரை அதிகரிக்கும்” என்றார்.
இது மட்டுமின்றி மூலப் பொருட்கள் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படுவதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பும் பட்டாசு விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
இந்த வருட தீபாவளிக்கு ஒளி - ஒலி குறையாகவே இருக்கும் என்று அடித்துச் சொல்லலாம். இருப்பினும் எந்த விலைக் கொடுத்தாவது காசைக் கரியாக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply