புதுடெல்லி : அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவதால் இந்தியாவின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 158 ஆண்டுகள் பாரம்பரியமும், பெருமையும் மிகுந்த அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய முதலீட்டு வங்கியான ‘லெஹ்மன் பிரதர்ஸ்’ திவால் அறிவிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவிலும் சில வெளிநாட்டு வங்கிகள் மூடப்படும் என்ற வதந்தியும் பரவியது. உடனே பலர் ஏ.டி.எம்களுக்கு படை எடுத்தனர்.
இந்நிலையில் பேசிய இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “அமெரிக்காவின் நிதி நெருக்கடிக்கும் இந்திய வங்கி, நிதி நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய நிறுவனங்களின் அடிப்படை அம்சம் உறுதியாக உள்ளது.
ஆகவே இங்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. எவரும் கலக்கம் அடையத் தேவையில்லை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணை (ஐஆர்டிஏ), ரிசர்வ் வங்கி இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று என்னிடம் உறுதி அளித்துள்ளன.
கடன் சந்தையில் சிக்கல் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி செய்துள்ளது. பணப்புழக்கம் சீராக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வோம்” என்றார்.
நிதி அமைச்சரே உறுதி அளித்த பிறகு வீணான பயம் எதற்கு!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply