புதுடெல்லி : ரப்பர் மீது மீண்டும் முன் பேர வர்த்தகம் தொடங்க இருப்பதற்கான அறிவிப்புக்கு ரப்பர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுவரை இயற்கை ரப்பர் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் ரப்பர் மீதான முன்பேரம் தொடங்க இருப்பதாக “பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷ்ன்” அதாவது விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தைகளுக்கான கட்டுபாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கு ரப்பர் வர்த்தகத்தில் உள்ள வணிகர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏனெனில் ரப்பர் மீதான முன்பேர வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்ட பிறகே ரப்பருக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
இது ரப்பர் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல் இருந்தது. ஆனால் இந்த மேற்சொன்ன ரப்பர் மீது முன்பேர வர்த்தகத் தடை நீங்கினால் ரப்பர் துறைக்கு கடும்பாதிப்பு ஏற்படக்கூடும்.
ரப்பர் வர்த்தகத்தில் உள்ள வணிகர்களின் பிரச்சினை ரப்பரில் அழிப்பது போல அகன்று விடுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply