முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ஏடிஎம் இயந்திரம் மூலம் செக் டெபாசிட்!

ஏடிஎம் இயந்திரம் மூலம் செக் டெபாசிட்!

புதுடெல்லி : இனி ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் காசோலையை டெபாசிட் செய்யலாம். இதே போல் ஏடிஎம்-ல் கார்டை செருகி பின் நம்பரை பதிவு செய்வதற்குப் பதில் ஒரு செமீ உயர்த்துக்குள் கைரேகையை காட்டினால் ஸ்கேன் செய்யப்பட்டு உங்கள் கணக்குத் திறந்து கொள்ளும்.

சர்வதேச அளவில் ஏ.டி.எம் மிஷின்களில் பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் சில இந்தியாவிலும் அமலாக்கப்பட உள்ளது.

அடுத்து சில மாதங்களில் ஏ.டி.எம்-ல் நான்கு முக்கிய வசதிகளை அளிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

அதில் ஒன்று தான் இந்த காசோலை டிபாசிட் செய்யும் முறை. இந்த வசதியை டில்லியில் சில வங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிஷினில் உள்ள ஸ்கேன் தொழில்நுட்பம் இதற்கு அடித்தளம். வாடிக்கையாளர் செக்கை வைத்ததும் மிஷின் ‘ஸ்கேன்’ செய்து கொள்ளும். அதில் உள்ள தொகையை வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கும். அதே நேரத்தில் செக் ஜெராக்ஸ் நகலையும் வெளித்தள்ளும். இது அல்லாது பல நாடுகளில் ஏ.டி.எம்.மில் ரொக்கப்பணத்தை டிபாசிட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த வசதி இந்தியாவில் பல வெளிநாட்டு வங்கி ஏ.டி.எம்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல இனி ஏடிஎம் கார்டைச் செருகி, பின் நம்பரைத் தட்ட வேண்டியதில்லை. ஒரு செமீ உயரத்துக்குள் கைரேகையை காட்டினால் கணக்கு திற்நது கொள்ளும். கைரேகை பதிவு சரியாக பதிவாகாத பட்சத்தில் மட்டுமே பின் நம்பர் தேவைப்படும்.

போலி ஏ.டி.எம் கார்டு மோசடியைத் தவிர்க்க இந்த வசதி எல்லாம் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.