அகமதாபாத் : பருத்தி விலை அதிகரிப்பில் திணறுகிறது நூற்பாலைகள்
‘பருத்தி ஆடையா காய்த்தது போல்’ என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் அந்த பருத்தி இப்போது ஆடையாக காய்ச்சாலும் இப்போது சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருக்கிறது.
அக்டோபர் மாத இறுதியுடன் முடிவடைய உள்ள பருத்தி பருவத்தில் 325 இலட்சம் பொதி பருத்தி உற்பத்தியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 356 கிலோ பருத்தியின் விலை 26000 ரூபாயாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பருத்தி உற்பத்தியில் ஈடுபடுவது என்பது சவாலான விஷயமாகவே இருக்கும் என்கிறார், இந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர்.
பருத்தி விலை உயர்வால் நிறைய நூற்பாலைகள் செயற்கை நூலிழைக்கு மாறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிகளவில் பருத்தி நூலிழையைப் பயன்படுத்தி வரும் இந்திய ஜவுளி நிறுவனங்கள் பருத்தி விலை அதிகரிப்பால் அவற்றின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார், வர்த்தமான் டெக்ஸ்டைல் நிறுவனத் தலைவர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply