உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் எண்ணெயை சந்தைப் படுத்தும் நிறுவனங்களுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு டீசலில் இயங்கும் கார்களுக்கு கலால் வரி உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி பெரிய கார்களுக்கு ரூ. 15000 - 20000 என்ற அளவில் கலால் வரியை உயர்த்தியது. கார் விலையோடு ஒப்பிடுகையில் இந்த வரி உயர்வு ஒரு சதவிகிதம்தான்.
அதே சமயம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் உள்நாட்டில் கார்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது. இவ் வாண்டிற்கான விற்பனையில் மாருதிக் காரின் விற்பனை 10 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
அதே போல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விற்பனை 20 சதகிதம் அதிகரித்து உள்ளது.
உள்நாட்டில் டீசலின் பயன்பாடு 24 சதவித அளவிற்கு அதிகமாகி விட்டதால் இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எதிர்கொள்ளவிருக்கிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply