முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இனி வீட்டுக்கடன் தொகை குறைவாகக் கிடைக்கும் - வங்கிகள் உஷார் நடவடிக்கை!

இனி வீட்டுக்கடன் தொகை குறைவாகக் கிடைக்கும் - வங்கிகள் உஷார் நடவடிக்கை!

மும்பை : வங்கிகள் வீட்டுக்கடன் தொகையைக் குறைத்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

தற்போது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் தேக்க நிலை ஏற்படவே, வீடு மற்றும் மனை விலைகள் சரிந்துள்ளன.

ஆகவே வங்கிகள் இந்த திடீர் முடிவு எடுத்துள்ளன. முன்பு வீட்டின் மதிப்பில் 95% வரை கடன் தொகை கிடைத்தது. இனி 80% முதல் 85% மட்டுமே கிடைக்கும்.

அதோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால் வங்கிகள் வீட்டுக் கடன்களின் வட்டியை அதிகரித்தன. இதனால் வீடு வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

விளைவு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது வீடு, மனை, விலை சரிவைச் சந்தித்து வருவதால் வங்கிகள் தங்கள் பாதுகாப்பு நிதி அளவை (மார்ஜின்) அதிகரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன.

ஒருவரது வீட்டுக்கடன் மதிப்பு ரூ.5லட்சம் வரை கடன் அளித்தனர்.

அதனை இப்போது 80% முதல் 85%  குறைத்துக் கொண்டுள்ளன. அதாவது ரூ.4லட்சம் முதல் 4.25லட்சம் வரை மட்டும் கிடைக்கும்.

வீடு வாங்குவோர் கடன் மீது அதிக முன்தொகை கட்ட வேண்டியிருக்கும்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.