முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பங்குவர்த்தக குறியீட்டெண் சரிவு

பங்குவர்த்தக குறியீட்டெண் சரிவு

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகத்தில் இன்று சுணக்கமான நிலை நிலவுகிறது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பின்னர் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்தது. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 269 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,488.00 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4686.20 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 3.57, பி.எஸ்.இ. 500- 69.73, சுமால் கேப் 4.81 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 907 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1090 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 61 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆசிய பங்குச் சந்தையில் முக்கியமான பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து உள்ளன. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்‌கிய பிறகு துவங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் சூழ்நிலையை பொறுத்து, இங்குள்ள பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

-லைவ் நியூஸ் சர்வீஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.