முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
அந்நிய முதலீடு இன்னும் குவிய வாய்ப்பு

அந்நிய முதலீடு இன்னும் குவிய வாய்ப்பு

மும்பை: இந்தியாவில் உள்ள தொழில் வர்த்தக நிறுவனங்களில் அந்நிய நாட்டைச் சேர்ந்த தனி நபர்கள் 60 பில்லியன் (6,000 கோடி) டாலர் முதலீடு செய்ய தாயராக உள்ளனர் என்று வெளிநாட்டைச் சேரந்த முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

சர்வதேச அளவில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, பங்குச் சந்தை வாயிலாக முதலீடு செய்வது. இந்த நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது.

இது மட்டுமல்லாமல் அதிக அளவு பணம் வைத்துள்ள தனி நபர்கள் அதிக அளவு முதலீடு செய்யும் முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்பவர்கள் பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் தனி நபராக இருக்காலாம் அல்லது சிறிய முதலீட்டு நிறுவனங்களாகவும் இருக்கலாம். இவர்கள் முதலீடு செய்யும் நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலின் எதிர்கால வாய்ப்புக்கள், இலாபம் ஈட்டும் திறன், நிர்வாகத் திறன் உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதலீடு செய்கின்றனர்.

இந்த வகை பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் மூலம் இந்திய நிறுவனங்களில் 60 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு வர வாய்ப்பு உள்ளது என்று யென் எக்ஸ்போ எனும் நிறுவனம் கணித்துள்ளது.

-லைவ் நியூஸ் சர்வீஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.